Showing posts with label Cricket News. Show all posts
Showing posts with label Cricket News. Show all posts

தமிழ் ரசிகர்கள் ஆர்வத்தை பணமாக்கப் பார்க்கிறதா ஐபிஎல்? எழும் கேள்விகள்

தமிழக மக்கள் மண் மீது மிக மரியாதை மட்டுமல்ல ஆர்வத்தையும் கொண்டவர்கள்.

இப்படி தமிழ் பெயர் சொல்லி யார் வந்தாலும் அவர்களை வாழ வைத்து அழகு பார்ப்பதில் தமிழர்கள் என்றுமே முதலிடம் தான்.

அந்த வகையில் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தமிழர்கள் அமோக வரவேற்பு தருகின்றனர்.

அதற்கு அணித் தலைவர் டோனியும், மண் மீது கொண்ட ஆர்வமும் தான் தமிழ் ரசிகர்களுக்கு காரணமாக உள்ளது.

இதனிடையில், ஐபிஎல் இணையதளம் மூலம் சென்னை அணி அல்லாத மற்ற அணி விளையாடும் போட்டிகளுக்கு குறைந்த பட்ச விலை ரூ.400க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால் சென்னை அணி விளையாடும் போட்டிகளுக்கு குறைந்த விலை ரூ. 800 என அறிவிக்கப்பட்டுள்ளதோடு அனைத்து டிக்கெட்களும் தீர்ந்துள்ளது.

மேலும், மற்ற அணி விளையாடும் போட்டுகளுக்கு டிக்கெட் என்ற பட்டன் வேலை செய்யும் நிலையில், சென்னை அணி விளையாடும் பெரும்பாலான போட்டிகளுக்கு டிக்கெட் விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதோடு, டிக்கெட் பட்டன் வேலை செய்யவில்லை.

அதுமட்டுமில்லாமல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி மோதும் போட்டிகளுக்கான டிக்கெட் விலை இதுவரையில்லாத அளவில் அதிகமாக உள்ளது.

இதையெல்லாம் பார்க்கும் போது தமிழ் ரசிகர்களின் அன்பை ஐபிஎல் முடிந்த வரை பணமாக்க பார்க்கிறதா என்ற கேள்வி எழுவதை தடுக்க முடியவில்லை.

Share:

ஆர். அஸ்வின் 2வது முறையாக அப்பா ஆனார்... மனைவி பிரீத்திக்கு பெண் குழந்தை பிறந்தது!



சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துப் புயல் ஆர். அஸ்வினின் மனைவி பிரீத்திக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை 21ம் தேதியே பிறந்து விட்டது. இருப்பினும் 6 நாள் கழித்து தற்போதுதான் பிரீத்தி அஸ்வின் தகவலை வெளியிட்டுள்ளார். 

அந்த சமயத்தில் தமிழகத்தில் வர்தா புயல் தாக்கம் இருந்ததாலும், தொடர்ந்து அஸ்வின் கிரிக்கெட்டில் பிசியாக இருந்ததாலும் செய்தியை தாமதமாக அறிவிக்க நேரிட்டதாக பிரீத்தி கூறியுள்ளார். 

2016ம் ஆண்டின் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரராக கலக்கலாக வருடத்தை முடிக்கும் அஸ்வினுக்கு சிறந்த பரிசாக அவரது குழந்தை வந்து சேர்ந்துள்ளது. இது அஸ்வின்- பிரீத்தி தம்பதிக்கு 2வது குழந்தையாகும். 

இங்கிலாந்தை வீழ்த்தியபோது 

சென்னையில் வைத்து இங்கிலாந்து அணியை இந்தியா 5வது டெஸ்ட் போட்டியில் வீழ்த்திய அடுத்த நாள் அதாவது டிசம்பர் 21ம் தேதி பிரீத்திக்கு குழந்தை பிறந்துள்ளது.

கேரம் பேபி 

இதுகுறித்து பிரீத்தி வெளியிட்டுள்ள டிவீட்டில் 21ம் தேதி எனக்கு கேரம் பேபி 2 பிறந்தது. புயல் காரணமாக சென்னையே முடங்கிப் போயிருந்த நிலையில் சற்று தாமதித்து சேப்பாக்கத்தில் 5 நாள் கிரிக்கெட் முடிந்த நிலையில் எனது மகள் பிறந்தாள் என்று கூறியுள்ளார்.

அப்பாவின் தருணத்தை திருட விரும்பவில்லை

டெஸ்ட் போட்டி முடிந்த அடுத்த நாள் பிறந்தநாள். அப்பாவின் (அஸ்வினின்) "கிரிக்கெட்டர் ஆப் தி இயர்" தருணத்தை பங்கு போட விரும்பாமல் இப்போது அனைவருக்கும் செய்தியை சொல்கிறோம் என்று இன்னொரு டிவீட்டில் தெரிவித்துள்ளார் பிரீத்தி.

பனிக்குடம் உடைந்து விடுமோ என நினைத்தேன் 

இன்னொரு டிவீட்டில், நாம் போட்டியில் வென்றபோது நான் மைதானத்தில்தான் இருந்தேன். அப்போது எனக்கு வலி வந்தது. பனிக்குடம் உடைந்து எங்கே குழந்தை சேப்பாக்கத்திலேயே பிறந்து விடுமோ என்று கூட நினைத்தேன். அப்படி நடந்திருந்தால் அது பெரிய செய்தியாகியிருக்கும் என்றும் கூறியுள்ளார் பிரீத்தி.

ஸ்பெஷல் வருஷம் 

அஸ்வினுக்கு 2016ம் ஆண்டு மறக்க முடியாததாக மாறியுள்ளது. இந்த ஆண்டில்தான் அவர் ஐசிசி கிரிக்கெட்டர் ஆப் தி இயர் மற்றும் ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட்டர் ஆப் தி இயர் விருதுகளை வென்றுள்ளார். மேலும் உலக அளவில் அவர்தான் தற்போது நம்பர் 1 பந்து வீச்சாளராக உள்ளார். இந்த ஆண்டில் 12 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 72 விக்கெட்களைச் சாய்த்துள்ளார். தற்போது 2வது முறையாக அவர் அப்பா ஆகியுள்ளார்.






Share:

டோணி எனக்கு அப்பா மாதிரி.. முகம்மது சமி உருக்கம்



டெல்லி: இந்திய ஒரு நாள் மற்றும் டுவென்டி 20 அணிகளின் கேப்டன் டோணி எனக்கு ஒரு தந்தை மாதிரி என்று உருகியுள்ளார் இந்திய அணியின் வேகப் பந்து வீச்சாளர் முகம்மது சமி. டோணி மீது தான் மிகுந்த மரியாதை வைத்துள்ளதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். 
உத்தரப் பிரதேசத்தில் பிறந்தவரான சமி, பெங்கால் அணிக்காக ஆடி வருபவர். இந்திய அணியில் இடம் பெற்றிருப்பவர். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3வது போட்டியில் காயம் காரணமாக அணியில் இடம் பெற முடியாமல் போய் விட்டது. 
இந்த நிலையில் இந்திய அணி வீரர்களுடன் தனது உறவு குறித்து டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு அளித்துள்ள பேட்டியில் மனம் திறந்துள்ளார் சமி. பேட்டியில் சமி கூறியதிலிருந்து... 

வீட்டில் இருப்பதைப் போன்ற உணர்வு: 

இந்திய அணியில் இடம் பெற்றிருப்பது எனக்கு பெருமை தருகிறது. டிரஸ்ஸிங் ரூமில் இருக்கும்போது வீட்டில் இருப்பதைப் போன்றே உணர்வேன். இந்திய வீரர்களுடனான உறவு உணர்வுப் பூர்வமானது.


ஆங்கிலம் தெரியாவிட்டாலும்: 

எனக்கு ஆங்கிலம் சரியாக பேச வராது. இதனால் ஆரம்பத்தில் தடுமாறினேன். ஆனால் வீரர்கள் அதைப் பொருட்படுத்தாமல் என்னை அப்படியே ஏற்றுக் கொண்டனர். தட்டிக் கொடுத்து ஊக்கம் தந்தனர்.

டோணி அப்பா: 

கேப்டன் டோணி குறித்துக் கேட்டால் என்ன சொல்வது.. எனக்கு அவர் அப்பா போல. ஒரு தந்தை - மகன் உறவு போன்றது எங்களுடைய உறவு. இதற்கு மேல் என்ன சொல்வது என்று தெரியவில்லை என்றார் சமி.





Share:

நன்றி மறந்த அஸ்வின்: டிவிட்டரில் வருத்தெடுத்த ரசிகர்கள்!!

ஐசிசி விருதுகளில் 2016-ம் ஆண்டுக்கான சிறந்த வீரர், மற்றும் சிறந்த டெஸ்ட் வீரர் என்று இரட்டை விருதுகளைத் பெற்றுள்ளார் அஸ்வின்.


ஐசிசி வருடாந்திர விருதுகளில் சச்சின், திராவிட் ஆகியோருக்குப் பிறகு 3-வது வீரராக ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதை அஸ்வின் பெற்றுள்ளார்.
 

இந்த விருது அறிவிப்புக்குப் பின்னர் இந்திய அணி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பேசிய அஸ்வின் தன் குடும்பத்தினருக்கும் அணி வீரர்களுக்கும் நன்றி தெரிவித்தார், ஆனால் முன்னாள் கேப்டன் தோனிக்கு நன்றி கூறவில்லை என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அஸ்வினுக்கு எதிராக கிளம்பியுள்ளனர்.
ட்வீட்கள் சில:
# கேப்டனும், லெஜண்டுமான தோனியை புறக்கணித்ததற்கு நன்றி அஸ்வின்!! பழச மறக்காதீங்க அஸ்வின்.
# யாரால் இவரது கிரிக்கெட் வாழ்வு பிரகாசம் பெற்றதோ அவரை புறக்கணிக்க முயல்கிறார்.. நான் அஸ்வின் ரசிகர்தான் ஆனால் இது அராஜகம்.
# தோனியை குறிப்பிடாதது குறித்து அவரது ரசிகர்கள் ஏன் காட்டுக்கூச்சலிடுகின்றனர் என்று தெரியவில்லை. அவர் எம்.எஸ்.டி. அவர் எந்த ஒரு புகழுக்கும் ஆசைப்படுபவர் அல்ல. எனவே தோனி ரசிகர்களே அமைதி காக்கவும். 
இது போன்ற மேலும் பல ட்வீட்கள் அஸ்வினை எதிர்த்து ரசிகர்கள் வெளியிட்டுள்ளனர்.

Share:

வருங்கால அணியை உருவாக்கும் தோனி

இந்திய அணியின் ஒருநாள் போட்டி கேப்டன் தோனி, இளம் வீரர் ஒருவரை தேர்ந்தெடுத்து அவருக்கு பின் அவரைப் போல் ஒரு வீரரை அணியில் உருவாக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


இந்திய அணியின் ஒருநாள் போட்டி கேப்டன் கூடிய விரைவில் ஓய்வு பெறுவார் என்ற நிலையில், அவருக்கு பின் அணியின் அவரை பொன்ற ஒரு வீரர் வேண்டும் என்ற எண்ணத்தில் இளம் வீரர் ஒருவரை தெர்ந்தெடுத்து அவருக்கு பயிற்சி அளித்து வருகிறார்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர், சிறந்த வெற்றி கேப்டன் மற்றும் சிறந்த விக்கெட் கீப்பர் என பல புகழ்களுக்கு சொந்தக்காரர் தோனி. ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜார்கண்ட் அணி தோனி ஆலோசனையில் செயல்பட்டு வருகிறது. இதில் ஜார்கண்ட் அணியின் இளம் வீரர் இஷான் கிஷான் என்பவர் மீது தோனி தனி கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தோனியை போலவே இஷானும் விக்கெட் கீப்பர் என்பதால் தன்னை போலவே இந்திய அணிக்கு மற்றொரு வீரரை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Share:

இப்படியும் ஒரு கிரிக்கெட் ரசிகரா?: சென்னை டெஸ்ட் போட்டியில் சுவாரஸ்யம்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர் ஒருவர் இந்திய நாட்டின் ஜெர்சியை விரும்பி அணிந்துகொண்ட சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது.



இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5ஆவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 477 ரன்களும், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 759 ரன்கள் குவித்து இருந்தது. இதனையடுத்து இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸை ஆடிக்கொண்டிருந்த வேளையில் இங்கிலாந்து ரசிகர் ஒருவர் இந்திய அணியின் ஜெர்சியை வாங்கி விரும்பி அணிந்துகொண்டது சுவாரஸ்யத்தை அளித்தது.

Share:

உலகிலேயே கிரிக்கெட் களத்தில் அதிக வயதான அறிமுக வீரராக களமிறங்கியவர் என்ற பெருமையை பெற்றவர் ராஜா மஹாராஜ் சிங்.


நவம்பர் 27, 1950ம் ஆண்டு தனது 72வது வயதில் நடந்த முதல்தர டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ராஜா மஹாராஜ் சிங் மும்பை அணி சார்பாக அறிமுக வீரராக களமிறங்கினார்.
மும்பை கவர்னர் அணியின் கேப்டனாகவும் களமிறங்கிய சிங், தனது முதல் இன்னிங்சில் 4 ரன்கள் மட்டுமே எடுத்தார். காயம் காரணமாக இரண்டாவது இன்னிங்சில் விளையாடவில்லை. 
இதுவே ராஜா மஹாராஜ் சிங் விளையாடிய முதல் மற்றும் கடைசி போட்டியாகும். அதுவும் ஒரே ஒரு இன்னிங்ஸ் மட்டுமே விளையாடியுள்ளார். 
இவர் மும்பையின் முதல் இந்திய கவர்னர் என்பது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட் போட்டியில் விளையாடி 9 ஆண்டுகள் பிறகு 1959ஆம் ஆண்டில் மரணமடைந்தார்.

Share:

சூதாட்டம்.. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரருக்கு 2 ஆண்டுகள் விளையாடத் தடை!


கேப்டவுன் : தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் அல்விரோ பீட்டர்சன் உள்நாட்டுப் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இது உறுதி செய்யப்பட்டதால் 2 ஆண்டுகளுக்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாட அவருக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரரான அல்விரோ பீட்டர்சன் அந்நாட்டு அணிக்காக 36 டெஸ்ட் போட்டிகள் 21 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 36 வயதான இவர் கடந்த மாதம் நடைபெற்ற உள்நாட்டுப் டி20 கிரிக்கெட் தொடரின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் போது தான் சூதாட்ட தரகரை சந்தித்ததாக அவர் ஒப்புக்கொண்டார். ஆனால் போட்டியின் முடிவை நிர்ணயிக்க பணம் பெறும் எண்ணத்தில் சந்திக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். 

இருப்பினும் கிரிக்கெட் சூதாட்ட தரகரை சந்தித்ததால் பீட்டர்சனுக்கு 2 ஆண்டுகள் தடை விதித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதனால் அவர் 2018ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி வரை சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாது.



Share:

’விராட் கோலிக்கு இணையானவர்; துப்பாக்கி போன்றவர்’ - பயிற்சியாளர் புகழாரம்

பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசம், துப்பாக்கி போன்றவர் என்றும் ’விராட் கோலிக்கு இணையானவர் என்றும் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் புகழாரம் சூட்டியுள்ளார்.


இந்திய அணியின் ரன் குவிக்கும் இயந்திரம் என்று வர்ணிக்கப்படுப்வர் விராட் கோலி. கிரிக்கெட் உலகில் பல சாதனைகளை புரிந்துள்ளார்; இன்னும் பல சாதனைகளை முறியடிக்க வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

இந்நிலையில், முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரரும், தற்போதைய பாகிஸ்தான் பயிற்சியாளருமான மிக்கி ஆர்தர் பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசமை ஏகபோகமாக புகழ்ந்து தள்ளியுள்ளார்.

இது குறித்து கூறியுள்ள மிக்கி ஆர்தர், “ஆசம் துப்பாக்கியைப் போன்ற இளம் வீரர். அசாதாரணமான வீரராக திகழ்வார். இதே வயதில் நுழைந்த விராட் கோலியைப் போல அற்புதமான வீரர். நான் அதிகப்படியான பாராட்டை தெரிவிப்பதாக இருக்கலாம். ஆனால், அதுதான் சரி” என்றார்.

18 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள பாபர் ஆசம் 3 சதங்கள் மற்றும் 5 அரைச்சதங்கள் உட்பட 886 ரன்களை குவித்துள்ளார். அவரது சராசரி 52.11 ஆகவும், ஸ்டிரைக் ரேட் 93.55 ஆகவும் இருக்கிறது. மேலும், 3 சதங்களும் தொடர்ச்சியாக அடிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் 176 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 26 சதங்கள் மற்றும் 38 அரைச்சதங்கள் உட்பட 7570 ரன்களை குவித்துள்ளார். அவரது சராசரி 52.93 ஆகவும், ஸ்டிரைக் ரேட் 90.43 ஆகவும் உள்ளது.

Share:

பயிற்சியின்றி களமிறங்க தோனிக்கு அனுமதி

இரண்டு மாத இடைவெளியைத் தொடர்ந்து இங்கிலாந்து அணியுடன் வரும் ஜனவரி மாதம் நடைப்பெறவுள்ள ஒருநாள் போட்டி தொடரில் தோனி விளையாடவுள்ளார். இதில் தோனி பயிற்சியின்றி களமிறங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் தோனி கடந்த அக்டோபர் மாதம் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடினார். அதைத்தொடர்ந்து இரண்டு மாத இடைவெளிக்கு பின் வரும் ஜனவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிராக நடைப்பெற உள்ள ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளார்.

இந்நிலையில் அவர் பயிற்சியின்றி களமிறங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுவே பயிற்சியின்றி களமிறங்குவது அவருக்கு முதல் ஒருநாள் போட்டியாகும்.

Share:

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் கனவு அணி.. இந்திய அணியிலிருந்து தேர்வான ஒரே வீரர் யார் தெரியுமா?

துபாய்: ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் கனவு அணி வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்திய அணியில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் மட்டும் இடம் பெற்றுள்ளார். ஐசிசி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிக்கான கனவு அணி வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் அலஸ்டர் குக் தலைமையிலான இந்த அணியில் நான் இங்கிலாந்து வீரர்களும், டேவிட் வார்னர் உள்ளிட்ட 4 ஆஸ்திரலிய வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.



பட்டியலில் இடம் பெற்றுள்ள வீரர்கள் : 

1. டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா) 
2. அலஸ்டர் குக் ( இங்கிலாந்து- கேப்டன்) 
3. கனே வில்லியம்சன் ( நியூஸிலாந்து) 
4. ஜோ ரூட் (இங்கிலாந்து) 
5. ஆடம் வோகெஸ் (ஆஸ்திரேலியா) 
6. ஜானி பேர்ஸ்டோவ் (இங்கிலாந்து-விக்கெட் கீப்பர்) 
7. பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து) 
8. ரவிச்சந்திரன் அஸ்வின் (இந்தியா) 
9. ரங்கனா ஹெராத் (இலங்கை) 
10. மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா) 
11.டேல் ஸ்டெய்ன் (தென் ஆப்பிரிக்கா) 
12.ஸ்டீவ் ஸ்மித் ( ஆஸ்திரேலியா)


அதேநேரத்தில் ஐசிசி ஒரு நாள் போட்டிக்கான அணியின் கேப்டனாக விராட் கோஹ்லி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒரு நாள் போட்டிக்கான கனவு அணியில் இந்திய வீரர்கள் ரவிந்திர ஜடேஜா, ரோகித் சர்மா, ஆயோர் இடம் பெற்றுள்ளனர். 

1. டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா) 
2. குவெண்டன் டி காக் ( தென் ஆப்பிரிக்கா) 
3. ரோகித் சர்மா(இந்தியா) 
4. விராட் கோஹ்லி ( இந்தியா-கேப்டன்) 
5. டி வில்லியர்ஸ் ( தென்ஆப்பிரிக்கா) 
6. ஜோஸ் பட்லர் ( இங்கிலாந்து) 
7. மிட்செல் மார்ஸ் ( ஆஸ்திரேலியா) 
8. ரவீந்திர ஜடேஜா (இந்தியா) 
9. மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா) 
10. ரபாடா (தென் ஆப்பிரிக்கா) 
11. சுனில் நரைன் (வெஸ்ட் இண்டீஸ்) 
12. இம்ரான் தாஹீர் (தென் ஆப்பிரிக்கா) 

ஐசிசி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி கனவு அணியில் இந்திய வீரர்கள் இடம்பெற்றிருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.









Share:

இந்த ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர், டெஸ்ட் வீரர் அஸ்வின்.. அறிவித்தது ஐசிசி!


துபாய்: இந்த ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரராக இந்திய வீரர் ரவிச்சந்திர அஸ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சிறந்த டெஸ்ட் வீரர் விருதையும் அவர் பெறுகிறார். இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திர அஸ்வின் பந்து வீச்சாளர்கள் பட்டியலிலும், ஆல் ரவுண்டர்கள் தரவரிசைப் பட்டியலிலும் ஏற்கனவே முதலிடத்தில் உள்ளார். இந்நிலையில் அண்மையில் நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய அவர் 28 விக்கெட்டுகளையும் 4 அரைச்சதங்களையும் எடுத்திருந்தார். 

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2016 ஆம் வருடத்துக்கான சிறந்த வீரராகவும் , சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராகவும் அஸ்வினை தேர்வு செய்துள்ளது. இதன்மூலம் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான சர் கார்ஃபில்ட் சோபர்ஸ் கோப்பையை அஸ்வின் பெறுகிறார். இந்த விருது தேர்வுக்கான காலத்தல் அஸ்வின் 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி48 விக்கெட்டுகள் மற்றும் 336 ரன்களை குவித்துள்ளார். மேலும் 19, 20 ஓவர் போட்டிகளில் விளையாடி அவர் 27 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதைப் பெறும் மூன்றாவது இந்திய வீரர் அஸ்வின் ஆவர். இதற்கு முன்னர் 2010ஆம் வருடம் சச்சின் டெண்டுல்கரும், 2001 ஆம் ஆண்டில் ராகுல் டிராவிட்டும் விருதுகளை வென்றுள்ளனர். அஸ்வின் ஒரே வருடத்தில் இந்த இரண்டு விருதுகளையும் பெறும் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் ராகுல் டிராவிட் 2004இல் 2 விருதுகளையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.




Share:

எந்த அணியில் எந்த வீரர்கள்.. ஐபிஎல் டீம் பட்டியல் வெளியானது

டெல்லி: விவோ ஐபிஎல் 2017 தொடரில் ஆடுவதற்காக மொத்தம் 8 அணிகள் ரெடியாகியுள்ளன. அவற்றில் 44 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 140 கிரிக்கெட் வீரர்கள் இதுவரை இறுதி செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்த பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. எஞ்சியுள்ள வீரர்கள் அடுத்த ஆண்டு போட்டி தொடங்கும் முன்பாக ஏலம் மூலம் எடுக்கப்படுவார்கள்.


ரைசிங் புனே சூப்பர்ஜையான்ட்ஸ் அணி, மகேந்திர சிங் டோணி தலைமையிலேயே வரும் ஐபிஎல் தொடரிலும் களம் காண உள்ளது. குஜராத் லயன்ஸ் அணியின் தலைவராக சுரேஷ் ரெய்னா தொடருவார். புனேவும், குஜராத் அணியும் தலா 16 பழைய வீரர்களை தங்கள் வசம் வைத்துள்ளன.

மும்பை மற்றும் டெல்லி அணியின் வீரர்களையும் இப்பட்டியலில் நீங்கள் பார்க்கலாம்.

விராட் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தனது பழைய 20 வீரர்களை தக்க வைத்துக்கொண்டுள்ள நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது 17 பழைய வீரர்களை தக்க வைத்துள்ளது.

பஞ்சாப் அணி, பழைய 19 வீரர்களையும், கொல்கத்தா அணி பழைய 14 வீரர்களையும் தக்க வைத்துக்கொண்டுள்ளது.

அணிகளிடமுள்ள நிதி நிலவரத்தையும் இந்த பட்டியலில் நீங்கள் பார்த்துக்கொள்ள முடியும்.









Share:

31 வருடங்களுக்கு பிறகு உலக அளவில் ஒரு சாதனை.. சென்னை மண்ணில் அஸ்வின் அசத்தல்


சென்னை: 
31 வருடங்களுக்கு பிறகு உலக டெஸ்ட் அரங்கில் ஆல்-ரவுண்டராக அஸ்வின் ஒரு சாதனையை நிகழ்த்தி காட்டியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆல்-ரவுண்டர்கள் கிடைப்பது அரிதிலும் அரிதான விஷயமாக இருந்தது. கபில்தேவ், ராபின் சிங், அகர்க்கர், இர்ஃபான் பதான், யுவராஜ் சிங் போன்ற விரல் விட்டு எண்ணக்கூடிய ஆல்-ரவுண்டர்களைத்தான் இந்திய அணி தனது வரலாற்றில் கண்டுள்ளது. இந்த நிலையில் இந்திய அணியின் அசைக்க முடியாத ஆல்-ரவுண்டராக உருவெடுத்துள்ளார் அஸ்வின். அதிலும் குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் அவரது சாதனை தொடருகிறது. விக்கெட்டுகளை வீழ்த்துவதிலும், ரன்களை குவிப்பதிலும் கபில் தேவுக்கு இணையாக அஸ்வின் மாறியுள்ளார்.

வரலாற்றிலேயே 7 பேர்:

 ஒரு டெஸ்ட் தொடரில் 250 ரன்களுக்கு மேல் எடுத்ததோடு, 25 விக்கெட்டுகளுக்கும் மேல் வீழ்த்தியவர்கள் வரலாற்றிலேயே 7 பேர்தான். அந்த எலைட் குரூப்பில் அஸ்வினும் தற்போது இணைந்துள்ளார். நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில்தான் இந்த சாதனையை படைத்துள்ளார் அஸ்வின்.


Share:

Like as Our Facebook Page

Total Pageviews

Blog Archive